அரச சேவையில் ஆட்குறைப்பு இடம்பெருமா அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அரசாங்க ஊழியர்களில் குறைப்பை மேற்கொள்ள எதிர்ப்பார்க்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், அரச சேவையில் மக்களை திறம்பட மற்றும் வினைத்திறனுடன் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Join WhtsApp Group
புதிய உள்ளூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.
නව විදේශ රැකියා පිළිබඳ තොරතුරු ලබා ගැනීමට WhatsApp සමූහයට සම්බන්ධ වන්න.
ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை நாட்டு மக்களுக்கு சேவைகளை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், சுகாதார அமைச்சின் கீழ்நிலையில் உள்ள பெரும்பாலான ஆட்சேர்ப்புகள் சேவை தேவையை விட அரசியல் தேவைக்காக செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 36 வீதத்தினால் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இந்த குற்றச்சட்டை சுமத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க ஊழியர்களில் குறைப்பை மேற்கொள்ள எதிர்ப்பார்க்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், அரச சேவையில் மக்களை திறம்பட மற்றும் வினைத்திறனுடன் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை நாட்டு மக்களுக்கு சேவைகளை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், சுகாதார அமைச்சின் கீழ்நிலையில் உள்ள பெரும்பாலான ஆட்சேர்ப்புகள் சேவை தேவையை விட அரசியல் தேவைக்காக செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 36 வீதத்தினால் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இந்த குற்றச்சட்டை சுமத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்களின் எண்ணிக்கை
அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ஐந்தரை இலட்சத்தினால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் என நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதனனையும் இதுவரையில் வெளியிடவில்லை.