Jobconlk

Join WhatsApp Group

රාජ්‍ය, පෞද්ගලික සහ විදේශීය රැකියා පිළිබඳ ක්ෂණික යාවත්කාලීන කිරීම් සඳහා අපගේ WhatsApp සමූහයට සම්බන්ධ වන්න.

அரச, தனியார் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்.

Rs.3000 Shoe Vouchers for 820,000 Students – 2025

The Cabinet has approved the provision of Rs.3000 Worth Shoe Vouchers for the selected 820,000 Students.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் விதந்துரைக்கமைய கீழ்வரும் பாடசாலை மாணவர்கள், பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்குப் பாதணிகளைக் கொள்வனவு செய்வதற்கான 3,000/- ரூபா வவுச்சர் ஒன்றை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(20.01.2025) நடைபெற்ற அடைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• 250 மாணவர் தொகைக்குக் குறைவான பாடசாலைகளில் கல்வி பயிலும் 650,000 மாணவர்களுக்கும்

• 250 மாணவர் தொகைக்குக் குறைவான பாடசாலை வகையைச் சாராத நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தோட்டப்பாடசாலை மாணவர்கள் 140,000 பேருக்கும்

• விசேட தேவையுள்ள மாணவர்கள் கல்வி பயில்கின்ற 28 பாடசாலைகளிலுள்ள 2300 மாணவர்களுக்கும்

• பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற 30,000 பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கும்

2015 ஆம் ஆண்டு தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைப் பாதணி வழங்கும் வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் வரைக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களும் குறித்த வேலைத்திட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

FB IMG 1737459296644

Leave a Comment