13 ways to spot a fake degree certificate
UGC Recognized Foreign University But Fake.
UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒரு போலிப் பல்கலைக்கழகமா ??
Is a University that recognized by UGC a Fake University ??
எனவே தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டம் தொடர்வதற்கு முன் சில விடயங்களை கட்டாயம் நாங்கள் அறிந்திருக்க வேண்டும்.
ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகம் (Foreign University) UGC ஆல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. IAU ( International Association of Universities )இல் அங்கத்துவம் வகிக்கிறது. ஆனால் எப்படி போலி பட்டம் அல்லது அப்படி ஒரு பல்கலைக்கழகமே இல்லை என்று கண்டுபிடிக்கிறார்கள் ?அப்பாவி மாணவர்கள் எப்படி ஏமாற்றப் படுகிறார்கள்? என்பதை சுருக்கமாக தெளிவு படுத்துகிறேன்.
●அந்த பல்கலைக்கழகம் எந்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் தொடர்பு வைத்துள்ளது?
●அப்படி ஒரு வெளிநாட்டு (Foreign University )பல்கலைக்கழகம் உண்மையிலே இயங்கி வருகிறதா?
போன்ற சில கேள்விகளுக்கு தெளிவான விடைகளை நீங்கள் பெறவேண்டும்.
UGC உங்கள் பட்டச் சான்றிதழுக்கு (Degree Certificate ) கடிதம் வழங்குவதற்கு இரண்டு இணைப்புகளை கவனிக்கும். அதாவது சர்வதேச பல்கலைக்கழக சங்கம் ( International Association of Universities IAU/WHED ) மற்றும் காமன்வெல்த் பல்கலைக்கழக சங்கம் (ACU) பட்டியலில் நீங்கள் பட்டம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயர் இருந்தால் ( UGC Recognized University ) உடனடியாக உங்கள் பெயருடன் கடிதம் (UGC Letter ) வழங்கும்.
How can I check my certificate is original?
02. IAU இன் இணையத்தளத்தில் (whed.net) குறித்த வெளிநாட்டு பல்கலைக் கழகத்தின் பெயரை தேடும்போது அனைத்து தகவல்களையும் பார்வையிடலாம்.
03. மேலும் உள்நாட்டு பல்கலைக்கழகத்தால் (Local Private Campus) ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டச் சான்றிதழின் பிரதியை உங்கள் நண்பரிடம் அல்லது Campusல் கேட்டெடுத்து IAUஇன் இணையதளத்தில் காட்டப்படும் தகவல்களுடன் ஒப்பீடு செய்யவும். அதாவது Logo, Address, Website Link..etc
04. IAU/whed website இல் காட்டப்படும் பல்கலைக்கழக Website Link ஐ Click செய்யவும். பின்னர் whed இல் உள்ள website Link மற்றும் அதனை click செய்தவுடன் நீங்கள் அடைந்த website link or URL ஐயும் ஒப்பீடு செய்யவும். வித்தியாசம் இருந்தால் சந்தேகப்படலாம்.
Ex. www.belcampusrdc.org IAU இல் பதிவான website. இதை
click செய்தால் www.bctuniversity.com எனும் website க்கு திருப்பிவிடப்படும்.
( check it yourself )
போலியான பல்கலைக்கழகத்தின் (Fake University’s Website இல் அடிக்கடி பதிவுகளை இட மாட்டார்கள் அந்த website உயிரோட்டம் அற்றதாகவே காணப்படும்.
06. மேலும் குறித்த அந்த வெப்சைட்டின் அடி பக்கத்தில் ( Footer of website ) Social Media Links கொடுத்திருப்பார்கள் அந்த Links ஐ நீங்கள் Click செய்தால் வேலை செய்ய வேண்டும். போலிப் பல்கலைக்கழகத்தின் (Fake University) அந்த link ஒருபோதும் வேலை செய்யாது. அப்படி வேலை செய்தாலும் updates or New post இருக்காது.
Ex. Facebook Page ஐ Check பண்ணவும்.
07. அடுத்தது நீங்கள் பதிவு செய்ய இருக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயரில் இன்னொரு பல்கலைக்கழகம் இருக்கிறதா? இயங்குகிறதா? என்பதை Google Search செய்து அறிந்து கொள்ளவும்.
உதாரணமாக.
Bel Campus என்று Google search செய்யும் போது Bel Campus மற்றும் BCT University இரண்டும் ஒன்றுதான் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது.
BCT University என்ற பெயரில் எந்த ஒரு பல்கலைக்கழகமும் உலகில் இல்லை என்று IAU இல் இருந்து பதிலும் கிடைத்தது.
8. உண்மையான பல்கலைக்கழகத்தின் வெப்சைட் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் அதில் உள்ள eMail IDக்கு நாங்கள் இலங்கையில் இந்த Campus ஊடாக உங்கள் பல்கலைக்கழகத்தில் பட்டம் தொடர முடியுமா? என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உறுதிப்படுத்திக் கொள்ளவும். ( Send a email for confirmation. But you should send to real university’s email address.)
09. அடுத்து நீங்கள் பட்டம் பெற இருக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் நாட்டில் என்ன மொழி பேசப்படுகிறது? ஆங்கில மொழி மூலமான கல்வி அங்கு வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யவும்.
அப்படி ஆங்கில மொழி பேசப்படாத / பயன்படுத்தப்படாத நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நாங்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழிமூல பட்டம் பெறப் போகிறோம் என்றால் இது சம்பந்தமாக மாணவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
Example.
Congo – French Language
Mexico – Spanish Language
10. அடுத்து பல்கலைக்கழகத்தின் Location ஐ சரிபார்பதுடன் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உறுதிப்படுத்தவும்.
11. குறித்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொள்ளலாமா? என்ற கேள்வியை UGC யிடம் கேட்க வேண்டாம் அவர்கள் உங்களுக்கு சரியான பதிலை தரமாட்டார்கள். பல போலி (Fake Degree Certificates) சான்றிதழ்கள்களுக்க UGC Letter வழங்கிவருகிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.
மேலும் நீங்கள் UGC Letter எடுக்கும்போது UGC Letter இன் அடிப்பக்க (Footnote) குறிப்பில் ” இந்த Degree ,UGC பொறுப்பு கூறாது ” என்று பதிவிடப்பட்டிருக்கும்.
நான் கூட இந்த முடிவைத் தான் எடுப்பேன். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் வெளிநாட்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் தொடர்வதற்கு முன் சில விடயங்களை நீங்களாகவே ஆய்வு செய்து இது சரியான பல்கலைக்கழகமா? பட்டம் தொடர முடியுமா? என்று நன்கு அறிந்த பின்னரே Private Campus இல் பதிவு செய்யவும். இல்லையென்றால் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். காலமும் வீணாகும்.
மேலும் பல தகவல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள கீழுள்ள தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
நன்றி