🏛️
View Details

13 ways to spot a fake degree certificate

UGC Recognized Foreign University But Fake.

UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒரு போலிப் பல்கலைக்கழகமா ??

Is a University that recognized by UGC a Fake University ??

பலர் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்கள் ஆனால் சில மாதங்களின் பின் அவர்களுடைய பட்டச் சான்றிதழ் போலி (Fake Degree Certificate )என்று நிரூபிக்கப்பட்டு பலராலும் விமர்சிக்கப்படுகிறது. சில அரச அதிகாரிகளின் தொழிலிலும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டம் தொடர்வதற்கு முன் சில விடயங்களை கட்டாயம் நாங்கள் அறிந்திருக்க வேண்டும்.


ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகம் (Foreign University) UGC  ஆல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. IAU ( International Association of Universities )இல் அங்கத்துவம் வகிக்கிறது. ஆனால் எப்படி போலி பட்டம் அல்லது அப்படி ஒரு பல்கலைக்கழகமே இல்லை என்று கண்டுபிடிக்கிறார்கள் ?அப்பாவி மாணவர்கள் எப்படி ஏமாற்றப் படுகிறார்கள்? என்பதை சுருக்கமாக தெளிவு படுத்துகிறேன்.

முதலில் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் தொடர்வதற்கு முன்னர் குறித்த உள்நாட்டு தனியார் பல்கலைக்கழகம் (Local Private Campus )பற்றி மக்களின் கருத்து மற்றும்

 ●அந்த பல்கலைக்கழகம் எந்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் தொடர்பு வைத்துள்ளது?

●அப்படி ஒரு வெளிநாட்டு (Foreign University )பல்கலைக்கழகம் உண்மையிலே இயங்கி வருகிறதா?

 போன்ற சில  கேள்விகளுக்கு தெளிவான விடைகளை நீங்கள் பெறவேண்டும்.

இலங்கை UGC யின் பங்கு என்ன? 

(UGC only check weather its listed in both body (ACU/IAU) they never look into differential logo, website, address,  physically class done, quality of teaching or never ever call or email to foreign originate University to verify.)

சுருக்கமாக அறிந்துகொள்வோம்.

UGC உங்கள் பட்டச் சான்றிதழுக்கு (Degree Certificate ) கடிதம் வழங்குவதற்கு  இரண்டு இணைப்புகளை கவனிக்கும். அதாவது சர்வதேச பல்கலைக்கழக சங்கம்  ( International Association of Universities IAU/WHED ) மற்றும் காமன்வெல்த் பல்கலைக்கழக சங்கம்  (ACU) பட்டியலில் நீங்கள் பட்டம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயர் இருந்தால் ( UGC Recognized University ) உடனடியாக உங்கள் பெயருடன்  கடிதம் (UGC Letter ) வழங்கும். 


UC-Recognized-universities


போலி பட்டம் எப்படி கண்டுபிடிப்பது? 

How can I check my certificate is original?

01. பதிவு செய்ய இருக்கும் வெளிநாட்டு பல்கலைக் கழகத்தின் சரியான பெயர், IAU Membership Number, Website Link,  Logo போன்றவற்றை Private Campus இல் பெற்றுக் கொள்ளவும்

fake-degree-in-srilanka

02. IAU இன் இணையத்தளத்தில் (whed.net) குறித்த வெளிநாட்டு பல்கலைக் கழகத்தின் பெயரை தேடும்போது அனைத்து தகவல்களையும் பார்வையிடலாம்.

03.  மேலும் உள்நாட்டு பல்கலைக்கழகத்தால் (Local Private Campus) ஏற்கனவே வழங்கப்பட்ட  பட்டச் சான்றிதழின் பிரதியை உங்கள் நண்பரிடம் அல்லது Campusல் கேட்டெடுத்து IAUஇன் இணையதளத்தில் காட்டப்படும்   தகவல்களுடன் ஒப்பீடு செய்யவும். அதாவது Logo, Address, Website Link..etc

fake-degree-in-srilanka



04. IAU/whed website இல் காட்டப்படும் பல்கலைக்கழக Website Link ஐ Click செய்யவும். பின்னர் whed இல் உள்ள website Link மற்றும் அதனை click  செய்தவுடன் நீங்கள் அடைந்த website link or URL ஐயும் ஒப்பீடு செய்யவும். வித்தியாசம் இருந்தால் சந்தேகப்படலாம்.

Ex. www.belcampusrdc.org IAU இல் பதிவான website. இதை
 click செய்தால் www.bctuniversity.com எனும் website க்கு திருப்பிவிடப்படும்.
( check it yourself )



05.  உங்களுக்கு தரப்பட்ட வெளிநாட்டு (Foreign University )பல்கலைக்கழகத்தின் வெப்சைட் update இல் இருக்கும். அதாவது அவர்களுடைய இணையதளத்தில் அடிக்கடி முக்கியமான நிகழ்வுகள் அல்லது புதிய விடயங்களை பதிவிடுவார்கள்.  பதிவிட்ட Date ஐப் பார்த்து கண்டுபிடிக்க முடியும். 

Degree-Confirmation-in-Sri-lanka

போலியான பல்கலைக்கழகத்தின் (Fake University’s Website இல்  அடிக்கடி பதிவுகளை இட மாட்டார்கள் அந்த website உயிரோட்டம் அற்றதாகவே காணப்படும்.

06. மேலும் குறித்த அந்த வெப்சைட்டின் அடி பக்கத்தில் ( Footer of website ) Social Media Links கொடுத்திருப்பார்கள்  அந்த Links  ஐ நீங்கள் Click  செய்தால்  வேலை செய்ய வேண்டும்.   போலிப் பல்கலைக்கழகத்தின் (Fake University) அந்த link ஒருபோதும் வேலை செய்யாது. அப்படி வேலை செய்தாலும் updates or New post  இருக்காது.
Ex. Facebook Page ஐ Check பண்ணவும். 


fake-degree-in-srilanka

07. அடுத்தது நீங்கள் பதிவு செய்ய இருக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயரில் இன்னொரு பல்கலைக்கழகம் இருக்கிறதா? இயங்குகிறதா? என்பதை Google Search செய்து அறிந்து கொள்ளவும்.

உதாரணமாக.
Bel Campus  என்று Google search செய்யும் போது Bel Campus மற்றும் BCT University இரண்டும் ஒன்றுதான் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது.

BCT University என்ற பெயரில் எந்த ஒரு பல்கலைக்கழகமும் உலகில் இல்லை என்று IAU இல் இருந்து பதிலும் கிடைத்தது.

8.  உண்மையான பல்கலைக்கழகத்தின் வெப்சைட் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் அதில் உள்ள eMail IDக்கு நாங்கள் இலங்கையில் இந்த Campus ஊடாக உங்கள் பல்கலைக்கழகத்தில் பட்டம் தொடர முடியுமா? என்று  கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி  உறுதிப்படுத்திக் கொள்ளவும். ( Send a email for confirmation. But you should send to real university’s email address.)

 09. அடுத்து நீங்கள் பட்டம் பெற இருக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் நாட்டில் என்ன மொழி பேசப்படுகிறது? ஆங்கில மொழி மூலமான கல்வி அங்கு வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யவும்.


Fake-degree-confirmation

அப்படி ஆங்கில மொழி பேசப்படாத / பயன்படுத்தப்படாத நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நாங்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழிமூல பட்டம் பெறப் போகிறோம் என்றால் இது சம்பந்தமாக மாணவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Example.
Congo – French Language
Mexico – Spanish Language

( IAU இன் Website இல் பார்க்கவும் )

10. அடுத்து பல்கலைக்கழகத்தின் Location ஐ சரிபார்பதுடன் தொலைபே‌சி அழை‌ப்பினை ஏற்படுத்தி உறுதிப்படுத்தவும்.

11. குறித்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொள்ளலாமா? என்ற கேள்வியை  UGC யிடம் கேட்க வேண்டாம் அவர்கள் உங்களுக்கு சரியான பதிலை தரமாட்டார்கள். பல போலி (Fake Degree Certificates) சான்றிதழ்கள்களுக்க UGC Letter வழங்கிவருகிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.

மேலும் நீங்கள்  UGC Letter எடுக்கும்போது UGC Letter இன் அடிப்பக்க (Footnote) குறிப்பில் ” இந்த Degree ,UGC பொறுப்பு கூறாது ” என்று பதிவிடப்பட்டிருக்கும்.


ஆகவே நாளை உங்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது UGC எந்த விதமான உதவியும் செய்ய மாட்டார்கள்.  முழுப்பொறுப்பையும் உங்கள் தலையிலேயே சுமத்தி விடுவார்கள்.

பொதுவாக நாங்கள் தனியார் பல்கலைக் கழகத்தை ஏன் தெரிவு செய்கிறோம்??  ஏனென்றால் அரச பல்கலைக்கழகத்தில் பட்டம் முடிக்க ஐந்து வருடங்களுக்கு மேல் எடுக்கின்றன. ஏற்கனவே நாம்  NVQ 5 மற்றும் HND Diploma க்காக மூன்று வருடங்கள் செலவழித்தோம். மீண்டும் அரச பல்கலைக்கழகத்தில்( Government University ) பதிவு செய்தால் இன்னும் நான்கைந்து வருடங்கள்  சென்றுவிடும் என யோசிப்போம் . இந்த சந்தர்ப்பத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடத்தில் அல்லது HND டிப்ளமோ இருந்தால் ஒருவரிடத்தில் பட்டம் (Fast track Degree /Top Up Degree )பூர்த்தியாகி விடும் என்ற மன நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். 

நான் கூட இந்த முடிவைத் தான் எடுப்பேன். இதில் எந்தப்  பிரச்சினையும் இல்லை.

 ஆனால்  வெளிநாட்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் தொடர்வதற்கு முன் சில விடயங்களை நீங்களாகவே ஆய்வு செய்து இது சரியான பல்கலைக்கழகமா? பட்டம் தொடர முடியுமா? என்று நன்கு அறிந்த பின்னரே Private Campus இல் பதிவு செய்யவும். இல்லையென்றால் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். காலமும் வீணாகும்.

மேலும் பல தகவல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள கீழுள்ள தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

நன்றி

Click the links 

🏛️

Fake Degree Certificate in Sri Lanka

📅 Posted: Nov 11, 2020
View Details
How fake degrees provides in Sri Lanka Imagination?

A named British Campus registered in a respected Divisional Secretary area in Sri  Lanka, after registration non of any authority monitors even UGC or Ministry of Education, meanwhile you can named whatsoever you preferred name, no matter its American or British Campus (only in Sri Lanka)

UGC /IAU /ACU:


British Campus will be signed an agreement between two campus as affiliated or academic Partnership in Sri Lanka (Regulation) .
But here is the fraudulent case begin , simply British Campus will be search a Foreign University which is listed in International of Association University for(IAU/WHED ) or Association of Commonwealth University (ACU) specifically a country chosen non available embassy in Colombo,here we go


For a example :

University of Alaska, USA original  websiteis www.uoa.edu.com (it’s listed ) upto here it’s fine legally done , but the thing is begin here British Campus (Locally Registered) create a website in the name of University of Alaska, fabricate website is named as www.unialaska.com (everything will be perfect address, chancellor, founder etc.. but only email different) perhaps they linked while clicking the originate website it’s directing to local created website (this magic only can identified 1 person out of 100 person)UGC and Responsibility, Colombo now British Campus will print a fake degree certificate in a shop or home award to Student , the completed Degree student goes to UGC in Colombo and the UGC only check weather its listed in both body (ACU/IAU) they never look into differential logo,website,address,  physically class done,quality of teaching or never ever call or email to foreign originate University to verify.
Finally UGC Approved and provide letter to said student  but they escape by writing Footnote (This letter not indicated authenticity of degrees or indicate students has registered and follow the course in the University ,the authenticity of the degree certificate should be verified from the University)
Government Department Job:

Ultimately, you can apply in any department of Sri Lanka for government job and you will get definitely a job but later on related Department may require a verification from University, now Government Departments will be send a Courier Service with Degree copy ( this will be addressed to local British Campus) or Email (will be send to locally created website email which is operated by local mediator) so the verification is coming from owned writing hand,so now no issues, students and departments 100% free to believe.
In this case not a single authority or department in Sri Lanka investigate , this is why they do forgery documents and running a Campus without any fear .Zuhair Ali 
MBA,PGD,HND,GHAFOORI
Freelance Writer
🏛️
View Details

Applications for HND programmes conducted by the SLIATE

Government Job Vacancies in Sri Lanka

HND application 2021: இலங்கையின் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம் (SLIATE)  2021 ஆண்டிற்கான HND கற்கைநெறிகளை தொடர்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

What is the meaning of SLIATE? 

Sri Lanka Institute of Advanced Technological Education

How to apply for SLIATE courses?

Students will be selected in two ways.

1. Based on entrance exam marks

2. Z Score ( A/L)

விண்ணப்பிக்கும் மாணவர்கள் இரண்டு முறைகளில் தெரிவு செய்யப்படுவார்கள்.

பிரிவு 1.  

அனுமதிப் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் 

HND in English, HNDIT, HNDM, HNDPM, HNDTHM, HNDFT, HNDCSPT

பிரிவு 2. 

Z புள்ளியின் அடிப்படையில்

HNDA,HNDBA,HNDBF, HNDE (CIVIL), HNDE (MECHANICAL), HNDE (ELECTRICAL & ELECTRONICS), HNDQS,HNDBSE,HNDT(Agri.)

How To Apply for HND programmes?

எவ்வாறு விண்ணப்பிப்பது?

I. ஒவ்வொரு  பிரிவிலும் ஆகக்கூடியது ஐந்து பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

II. ஒரு பிரிவுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும் விண்ணப்பதாரி இரண்டு பிரிவிலும் விண்ணப்பித்தால்  இரண்டு பிரிவுக்கும் வெவ்வேறாக பணம் செலுத்த வேண்டும். 

III. பணம் SLIATE பெயரில் உள்ள மக்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட வேண்டும்.  (SLIATE Account 025-2-001-1-3397613 at Peoples’ Bank, Hyde Park Branch Colombo 02 or any other branch of the Peoples’ Bank in Sri Lanka )  பணம் செலுத்திய பற்றுச் சீட்டில் உள்ள Transaction இலக்கத்தை ஆன்லைன் விண்ணப்பத்தில் உள்ளிட வேண்டும்.

IV. ஒன்லைனில் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிரின்ட் செய்து கையொப்பமிட்டு பணம் செலுத்திய பற்றுச் சீட்டுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

06/10/2020 ற்கு  பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

MODE OF CONDUCTING PROGRAMMES

  • Full-Time 
  • Part-Time  (During Weekends)
  • Medium: English

Part-Time courses are conducted for those who are employed in the relevant fields.

SLIATE HND PROGRAMMES COURSE FEES

  • Full-Time course fee – Free
  • Part-Time course fees per semester are as follows.
  • Higher National Diploma in Accountancy – HNDA Rs.7, 500/=
  • Higher National Diploma in English –HND in English Rs.12, 000/=
  • Higher National Diploma in Information Technology – HNDIT Rs.18, 000/=

REGISTRATION

Originals and certified copies of the educational and other required documents should be produced at the

Click Here to download for more details

ONLINE APPLICATION

How Many ATIs are in Sri Lanka?

பிந்தைய இரண்டாம் நிலை மட்டத்தில் ( Secondary Level ) ATI ஐ (Advanced Technological Institute ) வளர்ப்பதில் SLIATE கவனம் செலுத்தி வருகிறது. 

SLIATE நிறுவனம் ஒவ்வொரு மாகாணத்திலும் தொழில்நுட்ப கல்விக்காக Advanced Technological Institute ஐ நிறுவியுள்ளது. தற்போது இலங்கையில் 11 ATI க்கள் மற்றும் 7 ATI பிரிவுகளை நிர்வகித்து மேற்பார்வையிடுகிறது.

How Many ATIs are in Sri Lanka?

  • Kurunagala 
  • Colombo
  • Badulla
  • Jaffna
  • Kandy
  • Naiwala or Gampaha 
  • Trincomalee 
  • Labuduwa  or Galle

What are the courses in SLIATE?

  • HND in Business Administration
  • HND in Business Finance
  • HND in Building Service Engineering
  • HND in Food Technology
  • HND in Engineering
  • HND in Information Technology
  • HND in Management
  • HND in Technology
  • HND in Tourism and Hospitality Management
  • HND in Quantity Survey
  • HND in Accountancy


🏛️
View Details

Application for Teacher Training Colleges 2021 for Non Graduate untrained teachers

Government Job Vacancies in Sri Lanka

 

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட  ( Circular Date : 28/2016) சுற்றறிக்கையின் படி, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் படிப்புகளைப் பின்பற்ற 2020/2021 கல்வியாண்டிற்கான தகுதியை பூர்த்தி செய்த பட்டதாரி அல்லாத பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுள்ளன.

மேற்கண்ட தேவைக்கான அனைத்து வழிமுறைகளும் ஏற்கனவே Zonal Education Offices  க்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இறுதி தேதி 2020/04/27 என்றாலும், நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக எதிர்காலத்தில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரே புதிய இறுதித் தேதி தெரிவிக்கப்படும்.

இதுவரைக்கும் பயிற்சி முடிக்காத ஆசிரியர்கள் / ஆசிரியர் உதவியாளர்கள், சுற்றறிக்கை எண் 28/2016  ( Circular No 28/2016 ) இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை  ( Registered Post) பதிவுத் தபால் மூலம் அனுப்பவும்.

Address :

கல்வி இயக்குநர், ஆசிரியர் கல்வி நிர்வாக கிளை, கல்வி அமைச்சகம், இசுருபயா, பட்டாரமுல்ல.

#Director of Education, #Teacher Education #Administration Branch, #Ministry of Education, #Isurupaya, #Battaramulla.

Download Instructions.

Download Application 

🏛️
View Details

Government Job Vacancies in Sri Lanka


பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டது அடிப்படை உரிமை மீறலே
வெளி நாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு சட்டரீதியான காரணம், அதற்கு செய்ய வேண்டிய முறைகள் தொடர்பில் ஆலோசனைகள் கேட்டிருந்தார்கள் .
ஆகவே இவ்விடயம் தொடர்பில் சட்டரீதியாக உரையாடுகின்றேன். இந்த பிரச்சனை தொடர்பில் அரசு மிகத்தந்திரமான முறையில் தவிர்த்திருக்கின்றது என்பதை சட்டரீதியாக உறுதிப்படுத்தும் பதிவாக இப்பதிவு அமைகின்றது. இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவோடு உரையாடினேன்.
என் உரையாடலில் விண்ணப்பம் குறித்த தொழில் வாய்ப்புக்கு கோரப்பட்ட போது பட்டதாரி என்பது மட்டுமே தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே சட்டரீதியான எதிர்பார்ப்பை வெளி நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்களிடம் அரசே ஏற்படுத்தியது அதனூடாக அரசியலமைப்பின் 12.2 உறுப்புரையை அரசு மீறியதன் அடிப்படையில் இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என்பது என் வாதமாக இருந்தது.
அதன் போது ஒரு விடயம் வெளிவந்தது, குறித்த பட்டம் வழங்கும் நிறுவனம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது பட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என கேள்வியெழுப்பப்பட்டது. இதை நான் குறித்த பட்டதாரிகளிடம் உரையாடி அவர்களிடமிருந்த மானியங்கள் ஆணைக்குழு கடிதத்தையும் பார்வையிட்டேன்.
அக்கடிதத்தில் பட்டம் வழங்குகின்ற நிறுவனமே அங்கிகரிக்கப்பட்டது. பட்டத்தை உறுதிப்படுத்த மானியங்கள் ஆணைக்குழு தயாரில்லை என்பதை அக்கடிதம் வெளிப்படுத்தியதை கண்டேன். அதாவது பட்டதாரிகள் எண்ணிக்கையை தவிர்ப்பதற்காக அரசாங்கம் குறித்த சட்ட ஓட்டையை பயன்படுத்தியது.
இன்னும் தெளிவாக சொன்னால் வேலை கிடைத்தவுடன் செய்யும் பட்டசான்றிதழ் உறுதிப்படுத்தலை கிடைக்க முதலே அரசு செய்தது. இதற்கான காரணம் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல் என்பது வெளிப்படை உண்மை.
அதாவது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதற்கு பொறுப்புக்கூறாவிட்டாலும் குறித்த பட்டப்பிரதியை குறித்த பல்கலைக்கழக பதிவாளர் உறுதிப்படுத்த அரசு எதிர்பார்த்திருக்கின்றது.
இந்த காரணத்தை நீதிமன்றிலும் அரசு வெளிப்படுத்தவே போகின்றது. ஆனாலும் இந்த நடைமுறை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை என்ற கேள்வி நியாயமானது. அதற்கும் ரெடிமேட் காரணத்தை அரசு வைத்திருக்கும் என்றே கருதுகிறேன். .

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கே சில பட்டங்கள் வழங்குவதற்குரிய அனுமதி வழங்கப்படவில்லை. அத்தகைய பட்டங்களுக்கும் எந்த சட்ட அடிப்படைகளும் கிடையாது எனவும் கூறப்படலாம். எப்படி இருப்பினும் இது அடிப்படை உரிமை மீறலே.

Ref: Facebook