பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டது அடிப்படை உரிமை மீறலே
வெளி நாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு சட்டரீதியான காரணம், அதற்கு செய்ய வேண்டிய முறைகள் தொடர்பில் ஆலோசனைகள் கேட்டிருந்தார்கள் .
ஆகவே இவ்விடயம் தொடர்பில் சட்டரீதியாக உரையாடுகின்றேன். இந்த பிரச்சனை தொடர்பில் அரசு மிகத்தந்திரமான முறையில் தவிர்த்திருக்கின்றது என்பதை சட்டரீதியாக உறுதிப்படுத்தும் பதிவாக இப்பதிவு அமைகின்றது. இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவோடு உரையாடினேன்.
என் உரையாடலில் விண்ணப்பம் குறித்த தொழில் வாய்ப்புக்கு கோரப்பட்ட போது பட்டதாரி என்பது மட்டுமே தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே சட்டரீதியான எதிர்பார்ப்பை வெளி நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்களிடம் அரசே ஏற்படுத்தியது அதனூடாக அரசியலமைப்பின் 12.2 உறுப்புரையை அரசு மீறியதன் அடிப்படையில் இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என்பது என் வாதமாக இருந்தது.
அதன் போது ஒரு விடயம் வெளிவந்தது, குறித்த பட்டம் வழங்கும் நிறுவனம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது பட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என கேள்வியெழுப்பப்பட்டது. இதை நான் குறித்த பட்டதாரிகளிடம் உரையாடி அவர்களிடமிருந்த மானியங்கள் ஆணைக்குழு கடிதத்தையும் பார்வையிட்டேன்.
அக்கடிதத்தில் பட்டம் வழங்குகின்ற நிறுவனமே அங்கிகரிக்கப்பட்டது. பட்டத்தை உறுதிப்படுத்த மானியங்கள் ஆணைக்குழு தயாரில்லை என்பதை அக்கடிதம் வெளிப்படுத்தியதை கண்டேன். அதாவது பட்டதாரிகள் எண்ணிக்கையை தவிர்ப்பதற்காக அரசாங்கம் குறித்த சட்ட ஓட்டையை பயன்படுத்தியது.
இன்னும் தெளிவாக சொன்னால் வேலை கிடைத்தவுடன் செய்யும் பட்டசான்றிதழ் உறுதிப்படுத்தலை கிடைக்க முதலே அரசு செய்தது. இதற்கான காரணம் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல் என்பது வெளிப்படை உண்மை.
அதாவது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதற்கு பொறுப்புக்கூறாவிட்டாலும் குறித்த பட்டப்பிரதியை குறித்த பல்கலைக்கழக பதிவாளர் உறுதிப்படுத்த அரசு எதிர்பார்த்திருக்கின்றது.
இந்த காரணத்தை நீதிமன்றிலும் அரசு வெளிப்படுத்தவே போகின்றது. ஆனாலும் இந்த நடைமுறை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை என்ற கேள்வி நியாயமானது. அதற்கும் ரெடிமேட் காரணத்தை அரசு வைத்திருக்கும் என்றே கருதுகிறேன். .
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கே சில பட்டங்கள் வழங்குவதற்குரிய அனுமதி வழங்கப்படவில்லை. அத்தகைய பட்டங்களுக்கும் எந்த சட்ட அடிப்படைகளும் கிடையாது எனவும் கூறப்படலாம். எப்படி இருப்பினும் இது அடிப்படை உரிமை மீறலே.
Ref: Facebook